Search This Blog

Pages

Wednesday, September 5, 2012

புனித மேரி தலையை மூடியிருக்கும் போது ஹிஜாபை தடை செய்வது எப்படி..? இத்தாலிய அமைச்சர்


Muslim girls and others hijab
இத்தாலியில் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாபை தடை செய்யும் விதத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கையொப்பம் இட அந்நாட்டு உள்விவகார அமைச்சர்  மறுத்துள்ளார்
இத்தாலியில் பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்யும் முகமாக    இத்தாலிய பாராளுமன்ற  உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட உத்தேச தீர்மானத்தை ஆதரிக்க மறுத்த அந்நாட்டு உள்விவகார அமைச்சர் ராபர்ட்டோ மரூனி ,கிருஸ்தவ மதத்தில் புனித மேரி ஒவ்வொரு படத்திலும் தலையை மூடி கொண்டிருக்கும்  போது எப்படி ஹிஜாபை தடை செய்ய நாம் ஆதரிக்க  முடியும் என்று கேட்டுள்ளார்
“நமது கிருஸ்தவ மதத்தில் புனித மேரி ஒவ்வொரு படத்திலும் தலையை மூடி காட்சி தந்து கொண்டிருக்கும் போது எப்படி ஹிஜாபை பகிரங்க இடத்தில் அணிய எதிர்ப்பு தெரிவிக்க முடியும் . இது எந்த வகையில் நியாயம் ” என்று பாராளுமனறத்தில் அவர் கேட்டுள்ளார்
2004 ஆம் ஆண்டில் இத்தாலியில் முகமூடி அணிவதை தடை செய்யப்பட்டதை அடுத்து அதே சட்டத்தை காட்டி இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடைகளை தடை செய்ய இத்தாலியில் பல அரசியல் வாதிகள் முனைந்து வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment