-தில்ஷான் நிஷாம்-
“குறை சொல்லிப் புறம் பேசித்திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.”
(அல்குர்ஆன் 104:01)
(அல்குர்ஆன் 104:01)
சூடுபிடித்திருக்கும் மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் களங்களில், முஸ்லிம்களைப் பற்றி பொதுவாக ஒரு சாராரும், அவர்களது சமுக அந்தஸ்த்து, உரிமை என்பன பற்றி இன்னொரு சாராரும், அவர்களது சமுகக் கட்டமைப்பின் அபிவிருத்தி பற்றி மற்றொரு சாராரும் பேசிக்கொள்கிற வகையில், கிழக்கு மாகாணம் சிறப்புத் தானத்தை பிடித்துக் கொள்கிறது.
ஆனால் கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு தேர்தல் களத்திலும் முஸ்லிம்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய இஸ்லாத்தின் பிரதான கிளை அம்சங்களான ஈமான் எனும் நம்பிக்கை குறித்தும், அஹ்லாக் எனும் பண்புகள் குறித்தும் யாரும் அலட்டிக் கொள்வதாய்த் தெரியவில்லை.
மாறாக அவற்றிற்கு முற்றிலும் முரணான பல அம்சங்களை மக்களுக்கு படம் பிடித்துக் காட்டும் மேடைகளாகத் தான் பிரச்சார மேடைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம்கள் என்ற பெயர் இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.
இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு சமுகத்தின் முழுமுதல் சட்ட யாப்பாக அல்குர்ஆன் எனும் இறைக்கட்டளையே அமைந்திருத்தல் வேண்டும்.
இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு சமுகத்தின் முழுமுதல் சட்ட யாப்பாக அல்குர்ஆன் எனும் இறைக்கட்டளையே அமைந்திருத்தல் வேண்டும்.
இப்படியிருக்கும் நிலையில், நாங்கள் தான் முஸ்லிம்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு, இஸ்லாத்தின் அடிப்படை சட்ட யாப்பான அல் குர்ஆனிற்கு முற்றிலும் முரணான விதத்தில், ஒருவரை பற்றி ஒருவர் குறைசொல்லிப் புறம் பேசித் தெரியும், குர்ஆன் சொல்கிற கேடு கெட்ட இவர்களா கிழக்கிற்கு விடிவைக் கொண்டு வரப் போகிறார்கள்??? எனும் கேள்விக்கு விடையும் கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது.
கவலைக்குரிய விடயம் என்னவெனில் இத்தகையவர்களைத் தான் இன்னும் இந்த அப்பாவி மக்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.
அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று குர்ஆன் சொல்லுகிற போது, குர்ஆனை பின்பற்றி வாழும் சமுகமோ பிழையான முன்மாதிரிகளைப் பின்பற்றுவது ஏனோ?
இறைவன் எம்மை நேர் வழியில் செலுத்துவானாக!
No comments:
Post a Comment