நாம் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் தற்போது பலவிதமான நவீன தொழில்நுட்ப மாற்றங்களை புகுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியியலாளர்கள் கண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நவீன தொலைக்காட்சி பெட்டியை உருவாக்கி இருக்கிறார்கள்.
அதாவது இதற்காக தொலைக்காட்சி பெட்டியின் முன்பு விசேஷ கருவி ஒன்று இருக்கும். நாம் தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அமர்ந்து கண்ணை சிமிட்டினால் போதும் தொலைக்காட்சி உடனே இயங்கும். சேனல்களை மாற்றுவது, ஒலி அளவை கூட்டுவது அல்லது குறைப்பது, மின்சார சப்ளையை நிறுத்துவது போன்றவையை செய்ய முடியும்.
இந்த பணிகளை செய்ய ஒரு குறிப்பிட்ட கண் சிமிட்டலுக்கு அளவுகோல் நிர்ணயித்து இருக்கிறார்கள். மற்றபடி வழக்கம் போல நிகழ்ச்சிகளை காணலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment