Search This Blog

Pages

Friday, September 7, 2012

அப்பிள் அறிமுகப்படு​த்தும் புதிய iPad Mini

ipad_mini_002
தற்போது அதிகரித்து வரும் டேப்லெட் பாவனை காரணமாக, நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு நவீன வசதிகள் கொண்ட புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்கின்றன.
இந்நிலையில் சாதாரண அளவினை விடவும் சிறிய அளவுகொண்ட iPad Mini எனும் புதிய டேப்லெட் இனை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஏழு அங்குல தொடுதிரைவசதியுடன் கூடிய இந்த டேப்லெட் ஆனது எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கைப்பேசி பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வித்தியாசமானதும், அதிநவீன தொழில்நுட்பங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள அப்பிளின் iPhone 5 இனை அறிமுகப்படுத்தும் திகதியினை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 12ம் திகதி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக லோகோ ஒன்றினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
12 என்ற இலக்கத்தை கொண்ட குறித்த லோகோவின் நிழலாக 5 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 12 என்பது வெளியிடப்படவுள்ள திகதியையும், 5 என்பது iPhone 5 என்பதினையும் குறித்து நிற்கின்றது.
நான்கு அங்குல தொடுதிரை போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய இக்கைப்பேசியினை வெளியிடும் நிகழ்வானது சன் பிரான்ஸிஸ்கோ நகரில் அமைந்துள்ள Yerba Buena உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment