சிரிய அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சி மீதான ஆதரவை உறுதிப் படுத்த ஈரான் தனது 150 பாதுகாப்பு புரட்சி படைகளை சிரியாவுக்கு வான்வழியாக அனுப்பியுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் அதிபர் பஷர் அல் அசாதின் ராணுவ படைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
இதன் இ௦௦௦டையே அசாதின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்பதை உறிதிப்படுத்த 150 ஈரானிய பாதுகாப்பு புரட்சி படைகளை சிரியாவுக்கு அனுப்ப ஈரான் அதிபர் மொஹமத் அஹமத்நெஜாத் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக துப்பாக்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் வெடி குண்டுகள் உட்பட நூற்றுக்கணக்கான டன் அளவில இராணுவ உபகரணங்களை டெஹரானில் இருந்து டமாஸ்கஸுக்கு விமானம் மூலம் ஈரான் அரசு அனுப்பியுள்ளது.
மேலும் முக்கிய புரட்சி பாதுகாப்பு அதிகாரிகள் ஈரான் விமானம் மூலம் டமாஸ்கஸ் விரைந்துள்ளனர்.
No comments:
Post a Comment