Search This Blog

Pages

Saturday, September 8, 2012

விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தை இல்லை-ஜனாதிபதி


Sri Lanka's President Mahinda gestures during a meeting in Colombo
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய 58ஆவது பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றிய மகாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தமது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் ஊடகவிய லாளர்களை நேற்றுகாலையில் சந்தித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட கரு த்தை வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் ஆகியோர் இலட்சக்கணக்கில் சம்பளம் எடுக்கிறார்கள். இன்று அவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளார் கள். அவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடும் வரை நான் அவர்களுடன் பேசத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அவர்கள் அறிவித்தார்.
இந்தப் பல்கலைக்கழக விரிவுரையா ளர்களும், பேராசிரியர்களும் ஏதோ ஒரு அரசியல் நோக்கத்தை முன்வை த்தே இந்த வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்கள். அதனால், அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் சமாதான தீர்வை ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்ட ஊர் வலம், பாதயாத்திரைகள் ஆகியவற்றை பொதுநலவாய நாடுகளின் கூட்டம் இங்கு நடைபெறும் நாட்களில் நடத்தலாம். இதனால் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படும் என்று ஒரு ஊடகவியலாளர் கேட்டதற்கு அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்விதம் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதைப் பார்த்தால் வெளிநாட்டவர்கள் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் தலைத்தோங்குகின்றது என்பதை புரிந்து கொள்வார்கள். அரசாங்கம் மக்களின் இந்த உரிமையை பறிக்கவில்லை என்பதற்கு இந்த ஊர்வலங்கள் சான்று பகரும் என்று கூறினார். ஊர்வலங்களில் செல்பவர்கள் அமைதியாகவும், வன்முறைகளை ஏற்படுத்தாத வகையில் தங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்யலாம். ஆனால், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது கல் எறிதல் போன்ற வன்முறைகள் இடம்பெற்றாலும், கட்டிடங்களுக்குள் அத்துமீறி பிரவேசிக்க எத்தனித்தாலும் அரசாங்கம் கடுமையான முறையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார். எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் வரைபில் சம்பள உயர்வு பிரச்சினைகளை முன்வைப்பவர்கள் காத்திருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் கடந்த ஜூலை 4ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தில் சில பல்கலைக்கழகங்கள் இணைந்து கொள்ளாதபோதிலும், பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், கல்விசார் ஊழியர்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வொன்று காண வருமாறு அரசாங்கம் பலதடவைகள் அழைப்பு விடுத்தபோதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங் களின் மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பீடங்களையும் கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானித்த உயர்கல்வி அமைச்சு, அவற்றை நேற்றுமுன்தினம் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

No comments:

Post a Comment