Search This Blog

Pages

Saturday, September 8, 2012

கல்முனை மாநகரில் சுமுகமான வாக்குப்பதிவு (படங்கள் இணைப்பு)


DSCF2732
எஸ்.அஷ்ரப்கான் (மாநகர செய்தியாளர்)
கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசங்களில் மக்கள் வாக்களிப்புக்காக காலை 10 மணிவரை மிக குறைந்தளவில் வந்திருந்தபோதும், மதியம் 12 மணியிலிருந்து இருபாலாரும் மிக ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்கும் நிலையினை காணக்கூடியதாக இருந்தது.
அதுபோல் கல்முனை தமிழ் பிரதேசங்களில் மக்கள் வாக்களிப்பதற்காக மிகவும் ஆர்வத்தோடு ஆரம்ப நேரம் தொட்டு சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.
கல்முனை பிரதேசத்தின் கல்முனை, சாய்ந்தமருது,மாளிகைக்காடு போன்ற பிரதேசங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.
கல்முனைப் பிரதேசத்திலிருந்து  பொ.ஜ.ஐ.மு. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான எஸ்.நிஜாமுதீன் , பெஸ்டர் ஏ.எம்.றியாஸ் மற்றும் மு.கா. வேட்பாளர் கே.எம்.ஏ. ஜவாத் ஆகியோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment